Karuppu Ulunthu Vadai : சத்தான கருப்பு உளுந்து வடை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கருப்பு உளுத்தம் பருப்பு - 1 கப், பச்சரிசி - 1/4 கப், இஞ்சி - 1 சிறிய துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி, தண்ணீர், வெங்காயம் - 1/2 நறுக்கியது, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை நறுக்கியது, எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, கருப்பு உளுத்தம் பருப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அடுத்தது உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதனுடன் நறுக்கிய வெங்காயம், மிளகு தூள், நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.
அடுத்தது சிறிதளவு மாவை எடுத்து உள்ளங்கையில் தட்டி நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான கருப்பு உளுந்து வடை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -