Karuppu Ulunthu Gravy : சப்பாத்திக்கு ஏத்த சைடிஷ்.. இந்த கருப்பு உளுந்து கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க!

Karuppu Ulunthu Gravy : சப்பாத்திக்கு குருமா, சட்னி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது இந்த கருப்பு உளுந்து கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமா இருக்கும்..

Continues below advertisement
Karuppu Ulunthu Gravy : சப்பாத்திக்கு குருமா, சட்னி சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்போது இந்த கருப்பு உளுந்து கிரேவியை ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமா இருக்கும்..

கருப்பு உளுந்து கிரேவி

Continues below advertisement
1/6
தேவையான பொருட்கள் : கருப்பு உளுந்து - 50 மி.கி, நெய் - 1 மேசைக்கரண்டி , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, பிரியாணி இலை , சீரகம் - 1 தேக்கரண்டி, பட்டை - 4 துண்டு , கிராம்பு - 4 , இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி , தக்காளி விழுது - 4 பழம், மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி , கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி , உப்பு - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி, கசூரி மேத்தி வெண்ணெய், ஃப்ரெஷ் கிரீம்.

2/6
செய்முறை : முதலில் கருப்பு உளுந்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்து அதை குக்கரில் சேர்க்கவும். பருப்பு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளவும்.
3/6
அடுத்தது குக்கரில், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் பிரியாணி இலை சேர்த்து மிதமான தீயில் 5-6 விசில் வரும் வரை வேகவைத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
4/6
அடுத்தது கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வறுக்கவும். அதன் பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
5/6
அடுத்தது தக்காளி விழுது சேர்த்து 10 நிமிடம் வதக்கவும். கிரேவியில் எண்ணெய் பிரிந்ததும், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
Continues below advertisement
6/6
அடுத்தது வேகவைத்த உளுந்து மற்றும் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக கரம் மசாலா தூள், சர்க்கரை, கசூரி மேத்தி வெண்ணெய் மற்றும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து 5 நிமிடம் கிளறிவிட்டு இறக்கினால் சுவையான கருப்பு உளுந்து கிரேவி தயார்.
Sponsored Links by Taboola