Karamani Vadai : சுவையான மசாலா காராமணி வடை.. மழைக்கு மஜாவாக இருக்கும்!
தேவையான பொருட்கள் : காராமணி - 250 மி.லி, உப்பு , தண்ணீர், வெங்காயம் நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, சீரகம் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, எண்ணெய்.
செய்முறை: முதலில் காராமணியை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன்பின் காராமணியை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
அடுத்தது காராமணி பாதியளவு அரைத்த பிறகு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
அடுத்தது அரைத்த காராமணியை ஒரு பாத்திரத்தில் மாற்றி வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது வடை மாவை சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் தட்டி சூடான எண்ணெயில் சேர்க்கவும்.
எண்ணெயில் வடையை இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மசாலா காராமணி வடை தயார்.