Kadalai Maavu Laddu : சத்தான கடலை மாவு லட்டு செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : நெய், கடலை மாவு - 250 மிகி , பொடித்த சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் விதைகள், முந்திரி பருப்பு.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் மிக்ஸி ஜாரில் சர்க்கரை மற்றும் ஏலக்காயை சேர்த்து பொடியாக அரைத்துக்கொள்ளவும். அடுத்தது கடாயில் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் நெய் சூடானதும் கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். அதன்பிறகு சரியாக 5 நிமிடத்திற்கு இரண்டு முறை நெய் ஊற்றி கிளறவும்.
அடுத்தது கடலை மாவு கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆறவிடவும். அதன்பிறகு பொடியாக அரைத்த சர்க்கரை, முந்திரி பருப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
லட்டு கலவையில் சப்பாத்தி மாவு தன்மைக்கு வரும் வரை நெய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது உள்ளங்கையில் சிறிது நெய் தடவி, கடலைமாவு கலவையை உருண்டை பிடித்தால் சுவையான கடலைமாவு லட்டு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -