Vanilla Ice Cream : இனி கடை பக்கம் போக வேண்டாம்.. வீட்டிலே வெண்ணிலா ஐஸ்கிரீமை செய்யலாம்!
தேவையான பொருட்கள் : பால் - 500 மில்லி, வெனிலா பீன், சர்க்கரை - 1/2 கப், பிரெஷ் கிரீம் - 300 மில்லி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : வெண்ணிலா ஐஸ்கிரீம் செய்ய ஒரு பாத்திரத்தில் அதிகம் கொழுப்புள்ள பாலை மிதமான சூட்டில் கொதிக்கவிடவும்.
அடுத்து வெண்ணிலா பீன்ஸை நீளவாக்கில் வெட்டி உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து பாலுடன் சேர்த்து மிதமான சூட்டில் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
பத்து நிமிடங்கள் கழித்து பாலுடன் சர்க்கரை சேர்க்கவும். மிதமான சூட்டில் பாலின் அளவு குறையும், பால் சிறிது கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
அடுத்து குளிர்ந்த பாத்திரத்தில் குளிர்ந்த ஃப்ரஷ் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நன்றாக பீட் செய்யவும் இதில் ஆறவைத்த கெட்டி பாலை சேர்த்து ஒரு நிமிடத்திற்கு பீட் செய்யவும். அடித்த பின் கலவையை ஒரு மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து பீட்டரால் இரண்டாம் முறை இரண்டு நிமிடங்களுக்கு பீட் செய்ய வேண்டும். பின், இந்த கலவையை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி 8 - 12 மணி நேரம் ஃப்ரீஸரில் வைக்கவும். அவ்வளவுதான் வெண்ணிலா ஐஸ் க்ரீம் தயார்!!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -