Pattani Pulao: சுவையான பட்டாணி புலாவ் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்!
தேவையான பொருட்கள்:பாஸ்மதி அரிசி - 1 கப், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி - 1 துண்டு, பூண்டு - 4 பற்கள், நெய் - 1 1/2 மேசைக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பிரியாணி இலை - 1 , பட்டை - 1 துண்டு , ஏலக்காய் - 3 , கிராம்பு - 3 , சீரகம் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது , பச்சை பட்டாணி - 200 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, தேங்காய் பால் - 1 1/2 கப், புதினா இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் பாஸ்மதி அரிசியை கழுவி ஊறவைத்து கொள்ளவும். அடுத்தது மிக்சியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அடுத்தது அடுப்பில் குக்கரை வைத்து அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், பிச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்தது அரைத்து வைத்துள்ள பச்சை மிளகாய் விழுதை சேர்த்து நன்கு கிளறிவிடவும். அடுத்தது பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
பச்சை பட்டாணி 5 நிமிடம் வேகவைக்கவும் . அதன்பிறகு ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்க்கவும். அரிசி உடையாமல் கிளறிவிட்டு எ2 நிமிடத்திற்கு பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது புதினா இலை சேர்த்து குக்கரை மூடி வைத்து ஒரு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பட்டாணி புலாவ் தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -