Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Chettinad Ennai Kathirikai: மணக்க மணக்க செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: கத்திரிக்காய் - 8 , எண்ணெய் - 1/2 கப், கடுகு - 1/2 தேக்கரண்டி, வெந்தயம் - 1/4 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி, சிறிய வெங்காயம் - 1 கப் , சிறிய வெங்காயம் - 1 கப், பூண்டு - 6 தக்காளி - 1 , தக்காளி - 1 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, புளிச்சாறு - 1/4 கப், வெல்லம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை , உப்பு, தண்ணீர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் கத்திரிக்காயை எடுத்து நான்கு பக்கமும் கீறிவிட்டு கழுவி எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், புளிச்சாறு, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் தயார் செய்து கீறி வைத்துள்ள கத்திரிக்காயில் தடவி கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கத்தரிக்காய்களை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.அதே கடாயில் கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, சிறிய வெங்காயம், சின்ன வெங்காயம் ஆகிவற்றை வதக்கவும்.
அதன் பிறகு 2 நிமிடத்திற்கு பிறகு பூண்டு, தக்காளி, தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு, புளிச்சாறு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைக்கவும்.
கொதிகின்ற மசாலா கலவையில் வறுத்த கத்திரிக்காய்களை சேர்த்து 15 நிமிடத்திற்கு மூடிய நிலையில் வேகவைக்கவும் .கடைசியாக சிறிது தூள் வெல்லத்தை சேர்த்துகிளறிவிட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு எண்ணெய் கத்தரிக்காய் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -