ரவா லட்டை இப்படி செய்து பாருங்க..சுவை சூப்பராக இருக்கும்!
தேவையான பொருட்கள் : வெள்ளை ரவை - 2 கப், சர்க்கரை - 1 1/2 கப், ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, பால் - 1/4 கப், முந்திரி பருப்பு, உலர்ந்த திராட்சை, நெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : அடுப்பில் கடாயினை வைத்து நெய் ஊற்றி, முந்திரி மற்றும் திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி ரவையை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். அடுத்தது தேவையான அளவு சர்க்கரையை பொடியாக அரைத்து கொள்ளவும்.அதன்பின், பொடி சர்க்கரையுடன் ரவையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த ரவையுடன், ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி பருப்பு, வறுத்த உலர் திராட்சை, நெய் சிறிதளவு, தேவையான அளவு பால் சேர்த்து கெட்டியான பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
அந்த கலவையை லட்டு போல உருண்டை பிடித்து சிறிது நேரம் உலர வைத்தால் சுவையான ரவா லட்டு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -