Pasi Paruppu Adai: சத்து மிகுந்த பாசிப்பருப்பு அடை! உங்கள் டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்
தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு -250 கிராம், தண்ணீர், பூண்டு - 1 தேக்கரண்டி, இஞ்சி - 1 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி.
சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 நறுக்கியது, முட்டைக்கோஸ் - 1 கிண்ணம், கடலை மாவு - 3 மேசைக்கரண்டி, கொத்தமல்லி இலை - நறுக்கியது, எண்ணெய் - 2 தேக்கரண்டி.
செய்முறை: பாசிபருப்பை கழுவி தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதன்பிறகு தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது அரைத்த மாவில் துருவிய பூண்டு, இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அடுத்தது நறுக்கிய வெங்காயம், முட்டைக்கோஸ், கொத்தமல்லி இலைகள் சேர்த்து மீண்டும் நன்கு கலக்கவும்.
image 6