Cabbage Fry:சுவையான மொறு மொறு முட்டைகோஸ் ப்ரை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: முட்டைக்கோஸ் - 250 கிராம், உப்பு - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி , அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி, சோள மாவு - 1 மேசைக்கரண்டி , கடலை மாவு - 1 1/2 கப், முந்திரி பருப்பு - 100 கிராம், பச்சை மிளகாய், எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் முட்டை கோஸை நீள வாக்கில் மெல்லிசாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதன்பிறகு உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு சேர்க்கவும்.
அடுத்தது அரிசி மாவு, சோள மாவு, கடலை மாவு சேர்க்கவும். அதன்பிறகு தண்ணிர் தெளிச்சு மசாலா அனைத்தையும் நன்கு கலந்துகொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முந்திரி பருப்பை சேர்த்து நல்லா பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் நீளவாக்கில் கீறிய பச்சை மிளகாய், கருவேப்பில்லை இரண்டையும் தனித்தனியாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அதன்பின் முட்டைகோஸ் கலவையை கடாயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
கடைசியாக முந்திரி பருப்பு, முட்டைகோஸ் ப்ரை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலந்து விட்டால் சுவையான முட்டைக்கோஸ் ப்ரை தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -