Paruppu Keerai Kadaiyal:சத்தான பருப்பு கீரை கடையல் செய்வது எப்படி?ரெசிபி!
தேவையான பொருட்கள்: கீரை - 1 கட்டு, துவரம் பருப்பு - 1 கப், வெங்காயம் - 1 , தக்காளி - 3 , பூண்டு பல் - 5 , பச்சை மிளகாய் - 2 , புளி, மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன், கல்லுப்பு - 1 டீஸ்பூன், மிளகாய் தூள்- 2 டீஸ்பூன், தண்ணீர், நெய் - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன், கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு பல் -5 , சிவப்பு மிளகாய் - 2 , கறிவேப்பிலை, பெருங்காய தூள் - 1/4 டீஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஊறவைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள் அனைத்தையும் பிரஷர் குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நான்கு முதல் ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும்.
அதன் பிறகு மத்தை வைத்து பருப்பு கீரையை நான்கு கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் அதில் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
கடுகு பொரிந்ததும், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை,பெருங்காயம் மற்றும் தட்டிய பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து 5 நிமிடத்திற்கு கொதிக்கவைத்து இறக்கினால் சுவையான பருப்பு கீரை கடையல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -