Paneer Pulao: சுவையான லன்சி பாக்ஸ் ரெசிபி - பனீர் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பனீர் - 200 கிராம், பாஸ்மதி அரிசி - 1 கப் , வெங்காயம் - 2 , சீரகம்- 1/2 தேக்கரண்டி, கேரட் - 1 கப், பீன்ஸ் - 1 கப், பச்சை பட்டாணி - 1 கப், பச்சை மிளகாய் - 2 , கரம் மசாலா - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 மேசைக்கரண்டி , நெய் - 2 தேக்கரண்டி, புதினா இலைகள், கொத்துமல்லி இலை, பிரியாணி இலை , ஏலக்காய், கிராம்பு, மிளகு, இலவங்கப்பட்டை, தண்ணீர், உப்பு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பனீரை பொன்னிறமாக வருது எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானவுடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு, கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்த பன்னீர் துண்டுகள் சேர்த்து பனீர் உடையாமல் கிளறிவிடவும். அடுத்தது ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்க்கவும் .
அதன்பிறகு அரிசி முங்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான பனீர் புலாவ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -