Palakk Paneer Pulao: பாலக் கீரையில் சுவையான பனீர் புலாவ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி 200 கிராம், பாலக் கீரை ஒரு கட்டு, 3 நறுக்கிய வெங்காயம் , 3 நறுக்கப்பட்ட தக்காளி, 10 பச்சை மிளகாய், 2 பூண்டு, பனீர் 600 கிராம், 5 மேஜை கரண்டி சோள மாவு , 1/2 தேக்கரண்டி மிளகு தூள், உப்பு , 2 தேக்கரண்டி பெருஞ்சீரகம், 6 இலவங்கப்பட்டை, 6 கிராம்பு, 1 பெரிய ஏலக்காய், 50 கிராம் முந்திரி பருப்பு, 1/2 தேக்கரண்டி முழு மிளகு, 200 மில்லி எண்ணெய் , 3 டீஸ்பூன் நெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து அதில் பனீரை பிரட்டி எண்ணெயில் பொரித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
அடுத்தது இஞ்சி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அதன் பிறகு பாலக் கீரை சேர்த்து நன்கு வதக்கவும். கீரை வதங்கியதும், வறுத்து வைத்துள்ள பன்னீர் சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். அதன் பிறகு பஸ்மதி அரிசியை சேர்த்து 10 நிமிடம் மூடிய நிலையில் வேகவைக்கவும்.
வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் நெய் சேர்த்து கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவும். அடுத்தது புலாவ் பாத்திரத்தை தோசை கல்லில் 25 நிமிடம் வைத்து இறக்கினால் சுவையான பாலக் புலாவ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -