Cooking Tips : சப்பாத்திய இந்த மாதிரி செய்து குழந்தைக்கு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க!
அனுஷ் ச | 26 Jul 2024 03:59 PM (IST)
1
சூடான சப்பாத்தியில் சர்க்கரை, ஏலக்காய் பொடி கலந்த பால் சேர்த்து ஊறவைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
2
வாழைக்காய் பஜ்ஜி செய்யும் போது ஒரு கரண்டி இட்லி மாவு சேர்த்து பஜ்ஜி செய்தால் சுவையாக இருக்கும்.
3
வெண்டைக்காய் வத்தல் செய்யும் போது ஒரு டீஸ்பூன் புளித்த மோர் சேர்த்தால் வத்தல் சுவையாக இருக்கும்.
4
பால் கெட்டு போகாமல் மற்றும் அடி பிடிக்காமல் இருக்க பால் காய்ச்சும் பாத்திரத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
5
கேரட் பீன்ஸ் பொரியல் செய்யும் போது வேகவைத்த பாசி பருப்பை சேர்த்தால் சுவையாக இருக்கும்.
6
கோதுமை தோசை செய்யும் போது, கோதுமை மாவுடன், உளுந்து மாவு சேர்த்து தோசை செய்தால் கோதுமை தோசை பொன்னிறமாக வரும்.