Dragon chicken Recipe: ஸ்நாக்ஸ் டைம்..சுவையான ட்ராகன் சிக்கன் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : சிக்கன் - 300 கிராம், உப்பு, மிளகு, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, முட்டை - 1 , சோள மாவு - 3 தேக்கரண்டி,எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு - 1/4 கப், நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி, நறுக்கப்பட்ட பூண்டு - 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் சிதறல்கள் - 2 தேக்கரண்டி, வெங்காயத்தாள் , குடை மிளகாய் - 1/2 , சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, சில்லி சாஸ் - 4 தேக்கரண்டி, தக்காளி கெட்ச்அப் - ௩, மேசைக்கரண்டி, சர்க்கரை - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப் கரைத்த சோள மாவு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சோயா சாஸ், முட்டை, சோள மாவு சேர்த்து கலந்து ஊறவைக்கவும்.
அடுத்தது ஒரு கடாயில், எண்ணெய் சேர்த்து மூடி வைத்த சிக்கனை பொன்னிறமாக பொரித்து எடுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதன் பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தது முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி, பூண்டு,காய்ந்த மிளகாய், வெங்காயத்தாள், குடை மிளகாய், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்ச்சப், சர்க்கரை, தண்ணீர் கரைத்த சோள மாவு , உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின்னர் பொறித்த சிக்கன் துண்டுகளை சேர்த்து சாஸ் முழுவதும் சிக்கனில் இறங்கும் வரை வதக்கவும்.
சில நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து இறக்கினால் சுவையான ட்ராகன் சிக்கன் ரெடி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -