Pattani Masala: சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி மசாலா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: எண்ணெய் - 1 மேசைக்கரண்டி இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் , கல் பாசி, பச்சை பட்டாணி - 1 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, அரைத்த தக்காளி - 4 , தண்ணீர் , சக்கரை - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, கஸுரி மெதி , பச்சை மிளகாய் - 4 , பூண்டு - 6 பற்கள், இஞ்சி , எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, வெங்காயம் - 3 ,முந்திரி பருப்பு - 10
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
அதன்பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெரிய வெங்காயம், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கிய பின்பு மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். முந்திரி பேஸ்ட் தயார்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல் பாசி, பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அதன் பிறகு அரைத்த இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை மனம் நீங்கியதும், பச்சை பட்டானி, தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து 15 நிமிடத்திற்கு மூடிவைத்து வேகவைக்கவும்.
பதினைந்து நிமிடத்திற்கு பிறகு சிறிதளவு சக்கரை, கரம் மசாலா தூள், அரைத்த வெங்காயம் முந்திரி விழுதை சேர்த்து நான்கு கிளறவும். கடைசியாக கஸூரி மெத்தி சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி மசாலா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -