Corn Pakoda Recipe: சுவையான மாலைநேர ஸ்நாக்ஸ்; கார்ன் பக்கோடா ரெசிபி!
தேவையான பொருட்கள்: ஸ்வீட் சோளம் - 1 (வேகவைத்தது), வெங்காயம் - 2 நறுக்கியது , இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, பச்சை மிளகாய் - 3 நறுக்கியது, கறிவேப்பிலை நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி , காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி , சீரக தூள் - 1 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி , கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, கடலை மாவு - 1 கப் (250 மி .லி) அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி , கொத்தமல்லி இலை நறுக்கியது, தண்ணீர், எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ஸ்வீட் சோளம், மெல்லியதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும்
அதன் பின், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், சீரக தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்து கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கலந்துவிடவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியான மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் அடுப்பை மிதமான தீயில் வைத்து பிசைந்து வைத்த மாவை சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
பொரித்து எடுத்த கானை ஒரு பிளேட்டில் பரிமாறினால் சுவையான கார்ன் பகோடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -