Mutton Cutlet Recipe : வீட்டிலேயே சுவையான மட்டன் கட்லெட் செய்து எப்படி?

மட்டன் கட்லெட்
தேவையான பொருட்கள் : மட்டன் கொத்துக்கறி - 200 கிராம், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி, மல்லி தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர்,, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி , சோம்பு - 1/4 தேக்கரண்டி, பூண்டு - 1/2 தேக்கரண்டி, இஞ்சி - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1, வெங்காயம் - 1 , வேகவைத்த உருளைக்கிழங்கு - 4, முட்டை - 1 , கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, பிரட் தூள்
செய்முறை : குக்கரில் கொத்துக்கறி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகத்தூள், மல்லி தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய், சோம்பு, பூண்டு, இஞ்சி, மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பச்சை மனம் நீங்கும் வரை வதக்கவும். அடுத்தது வேகவைத்த உருளைக்கிழங்கை சேர்த்து கிளறிவிடவும்.
அதன்பின் அந்த கலவையில் வேக வைத்த கொத்துக்கறியை சேர்த்து வதக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து ஆறவிடவும். அடுத்தது ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து கலக்கி கொள்ளவும்.
பின்பு கொத்துக்கறி கலவையை வடை போல தட்டி முட்டையில் நினைத்து, ப்ரெட் தூளில் பிரட்டி பத்து நிமிடங்களுக்கு கட்லெட்டை உலரவிடவும்.
ஒரு கடாயில் வறுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கட்லெட்டை இரு புறமும் பொன்னிறமாக வறுத்து எடுத்தால் மட்டன் கட்லெட் ரெடி.