Cream Cheese:சுவையான க்ரீம் சீஸ் வீட்டிலேயே செய்யலாம் - இதோ ரெசிபி!
முழு கொழுப்புள்ள பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சை பழச்சாறை சேர்த்து, பால் திரியும் வரை காத்து இருக்கவும். அடுத்து ஒரு மஸ்லின் துணியை பயன்படுத்தி நீரை வடிகட்டவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎஞ்சியிருக்கும் எலுமிச்சை சுவையை நீக்க, சேனாவில் சிறிது நீரை ஊற்றவும். தண்ணீரை வடிகட்ட மஸ்லின் துணியை பிழியவும்.
பிழிந்தவுடன் முழுவதும் தண்ணீர் வடிய சேனாவை ஒரு வடிகட்டியின் மீது சுமார் 2 மணி நேரம் வைக்கவும். பின்பு சேனாவை சிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் சேர்க்கவும்.
அடுத்து உப்பு சேர்த்து மிருதுவாகவும் கிரீமியாகவும் வரை அரைக்கவும். இந்த கிரீம் சீஸை காற்று புகாத டப்பாவில் மாற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்
தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -