Cooking Tips : இப்படி செய்தால் பஜ்ஜி, வடை அதிக எண்ணெய் குடிக்காது!
அனுஷ் ச | 14 May 2024 02:00 PM (IST)
1
பூரி மாவில் தண்ணீர் ஊற்றி பிசைவதற்கு பதிலாக, ஒரு கப் பால் ஊற்றி பிசைந்து பூரி சுட்டால் மென்மையாகவும் சுவையாகவும் இருக்கும்.
2
வெங்காய பக்கோடா செய்யும் போது அரை டீஸ்பூன் சோம்பு மற்றும் கருவேப்பிலை சேர்த்து பக்கோடா செய்தால், சுவையும் மணமும் தூக்கலாக இருக்கும்
3
பஜ்ஜி மாவில் சிறிதளவு அரிசி மாவு சேர்த்தால், எண்ணெய் குடிக்காது பஜ்ஜியும் சுவையாக இருக்கும்.
4
சாம்பார் தண்ணியாக இருந்தால் அதை கெட்டியாக்குவதற்கு சிறிதளவு பொட்டுக்கடலையை பொடியாக அரைத்து குழம்பில் சேர்த்தால் கெட்டியாகிவிடும்
5
உளுந்து வடை செய்யும் போது உருளைக்கிழங்கை வேகவைத்து நன்கு மசித்து வடை மாவில் கலந்து வடை சுட்டால் அதிக எண்ணெய் குடிக்காது, வடையும் மொறு மொறுவென இருக்கும்.
6
நெல்லிக்காய் ஊறுகாய் ரொம்ப நாட்கள் கெடாமல் இருக்க, ஊறுகாய் தாளிக்கும் போது சிறிதளவு மிளகு தூள் சேர்க்க வேண்டும்.