உடலில் சேரும் தேவையில்லாத கொழுப்பை குறைக்கணுமா? இதோ ஹெர்பல் டீ ரெசிபி!
நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை அகற்ற ஆரோக்கியமாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, நன்றாக ஓய்வெடுப்பது போன்ற முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.எவ்வளவுதான் முயற்சித்தாலும் விரைவாக உடல் எடையைக் குறைப்பது என்பது இயலாத காரியம், உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்வதுடன் கூடுதலாக வீட்டிலேயே கிடைக்கும் உணவுகளைக் கொண்டு கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொப்பையை குறைப்பதில் குறிப்பாக பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எளிய வீட்டு வைத்தியத்தை காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளும்போது அது கொழுப்பை வேகமாகக் கரைக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்கவும், தொப்பையை குறைக்கவும் தேன் மிகவும் முக்கியமான பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆய்வுகளின்படி பசியைக் கட்டுப்படுத்த தேன் உதவுகிறது. கூடுதலாக, இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன,
தேன் மற்றும் இலவங்கப்பட்டை கஷாயத்தை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். அதற்கு முதலில் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அதில் ஒரு பத்தை இலவங்கப்பட்டை சேர்க்கவும். அல்லது அதற்கு மாற்றாக,அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கலாம். நன்றாக கலந்து கொதிக்க விடவும்.டுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும். இப்போது அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மீண்டும் கலக்கவும். தொப்பைக் கொழுப்பைக் குறைக்கவும் இந்த கஷாயத்தை இன்னமும் ஆரோக்கியமானதாக மாற்றவும் இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து பிழிந்து உட்கொள்ளலாம்.
உடற்பயிற்சிக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்கு முன் இந்த வெதுவெதுப்பான கஷாய நீரை உட்கொள்வது உடல் கொழுப்பை குறைக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -