Orange Ice Cream : ஆரஞ்சு ஐஸ் க்ரீம் வீட்டிலேயே செய்து அசத்துங்க.. வேற லெவல் டேஸ்டில் இருக்கும்!
ஆரஞ்சு பழத்தின் மேல் பகுதியில் கால் பாகம் அளவு வெட்டி எடுத்து தனியே வைத்து விட வேண்டும். அதன் அடி பகுதி பழத்தில் இருக்கும் சதையை ஒரு ஸ்பூன் அல்லது கத்தி வைத்து சுரண்டி எடுத்து விட வேண்டும். தோல் கிழியாமல் உள்ளே இருக்கும் சதையை மட்டும் எடுக்க வேண்டும். இந்த ஆரஞ்சு தோலை தனியே எடுத்து வைத்து விட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரம் வைத்து அரை அரை லிட்டர் கொழுப்பு நீக்காத பாலை சேர்த்து 4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து , அடுப்பை சிம்மில் வைத்து பாலை நன்றாக காய்ச்ச வேண்டும். பால் நன்றாக கொதித்து கெட்டிப்பதம் வரும் வரை கரண்டியால் கிண்டி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
பால் க்ரீம் நிலை வந்ததும் இதில் பொடியாக நறுக்கிய பிஸ்தா அல்லது பாதாம் பருப்பை ஒரு ஸ்பூன் அளவு சேர்க்க வேண்டும். இதனுடன் அரை ஸ்பூன் பாலாடை சேர்த்து கிளறி விட்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இந்த கலவையை அடுப்பில் இருந்து இறக்கி 10 நிமிடம் ஆற வைக்க வேண்டும். ஆறியதும் இந்த கலவை மேலும் சற்று கெட்டியாகி விடும்.
பின் நாம் தனியாக எடுத்து வைத்துள்ள ஆரஞ்சின் சதைப் பகுதியில் இருந்து சாறை மட்டும் பிழிந்து நாம் தயாரித்து வைத்துள்ள பால் கலவையில் சேர்த்து நன்றாக கிண்டி விட்டு. இதை நாம் எடுத்து வைத்துள்ள ஆரஞ்சு தோலினுள் நிரப்பவும்.
இதை வெட்டி எடுத்த மேல் பகுதி தோலை வைத்து மூடவும். இதை ஃப்ரீசரில் 3 மணி நேரம் வைத்து எடுத்தால் சுவையான ஆரஞ்சு ஐஸ் க்ரீம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -