Herbal Tea: துளசி, திப்பிலி,அதிமதுரம் சேர்த்து ஹெர்பல் டீ செய்து பாருங்க!இதோ ரெசிபி!
ஹெர்பல் டீ வீட்டிலேயே செய்து குடிப்பது நல்லது. துளசி, அதிமதுரம் உள்ளிட்டவற்றை வைத்து செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்- காய்ந்த துளசி இலை -கைப்பிடி காய்ந்த புதினா இலை- 1 கைப்பிடி பட்டை - சிறுதுண்டு ஏலக்காய் - 4 மிளகு - 1 தேக்கரண்டி அதிமதுரப் பொடி -1 மேசைக்கரண்டி சுக்குத் தூள் -1 தேக்கரண்டி திப்பிலி -5 ஜாதிக்காய் தூள் 2 மேசைக்கரண்டி டீத்தூள் ஒரு தேக்கரண்டி கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை- தேவையான அளவு . இவற்றை எடுத்துகொள்ள வேண்டும்.
துளசி இலையுடன் புதினா இலையையும் சேர்த்தும் மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். இத்துடன் மிளகு, பட்டை, ஏலக்காய், சுக்குத்தூள், திப்பிலி, அதிமதுரப் பொடி, ஜாதிக்காய் தூள், மத்தூள் சேர்த்து அரைத்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைக்கவும்.
பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அரைத்த தூள் 1 தேக்கரண்டி, தேவை யான அளவு கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி வடிகட்டவும்.
விரும்பினால் பால் அல்லது சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.
மழை, குளிர் காலத்தில் இந்த தேநீரை தயாரித்து அருந்தினால் ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டாது. மேலும் தேவையற்ற கொழுப்பை நீக்கும், அஜீரணக் கோளாறு களை அகற்றும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -