Healthy Chocolate Overnight Oats:ஆரோக்கியமான காலை உணவு; ஓவர்நைட் ஓட்ஸ் - இதோ ரெசிபி!
ஆரோக்கியமான உணவு வகைகளை தேர்வாக உள்ளவர்கள் ஓட்ஸ் தேர்வு செய்யலாம். காலை உணவாக ராகி தோசை, பழங்கள் என ஆரோக்கியமானதாக சாப்பிடலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓட்ஸ் உப்புமா, ஓட்ஸ் தோசை உள்ளிட்டவற்றிற்கு பதிலாக நட்ஸ், சீட்ஸ் சேர்த்து இரவு முழுவது ஓட்ஸ் ஊறவைத்து சாப்பிடலாம்.
சாக்லெட் ஓட்ஸ் எப்படி செய்யலாம் என்பதை காணாலாம். ஒரு டப்பாவில் ஓட்ஸ், பால், நட்ஸ், சீட்ஸ் ஆகியவற்றை சேர்த்து ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதோடு தேவையான கோகோ பவுடர் சேர்க்கவும்.
மறுநாள் காலையில், உங்களுக்குப் பிடித்த பழங்கள் சேர்த்து சாப்பிடலாம்.
இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் கலப்பது நல்லது. இது ஆரோக்கியமானதும் கூட. ஜிங்க், புரதச்சத்து உள்ளிடவைகள் இதில் அதிகம் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -