Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Oats Upma : இட்லி, தோசை போர் அடிக்குதா? அப்போ காலையில் சுவையான ஓட்ஸ் உப்மா செய்து சாப்பிடுங்க!
தேவையான பொருட்கள் : ஓட்ஸ் - 2 கப், எண்ணெய் - 1 1/2 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, கறிவேப்பிலை, பீன்ஸ் - 1 கப் நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பச்சை பட்டாணி - 1/4 கப் வேகவைத்தது , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி , உப்பு - 1 1/2 தேக்கரண்டி, தண்ணீர் - 1/2 கப், எலுமிச்சை பழச்சாறு, வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அதன் பிறகு பெருங்காயத்தூள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், பீன்ஸ், கேரட், தக்காளி, வேகவைத்த பச்சை பட்டாணி சேர்த்து வைத்தவும்.அதன் பின் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறிவிட்டு ஓட்ஸை சேர்க்கவும்.
அடுத்தது, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவைக்கவும்.
கடைசியாக எலுமிச்சை சாறு, வறுத்த வேர்க்கடலை, மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறிட்டு இறக்கினால் சுவையான ஓட்ஸ் உப்மா தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -