பாலக்கீரை காலிஃப்ளவர் பராத்தா செய்வது எப்படி?இதோ ரெசிபி!
தேவையான பொருட்கள் கோதுமை மாவு - இரண்டு கப் பாலக்கீரை விழுது - ஒரு கப் இளஞ்சூடான நீர் - ஒரு கப் ஓமம் - ஒரு ஸ்பூன் நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஸ்டஃப்பிங் காலிஃப்ளவர் - 200 கிராம் பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2 மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். இதில் பால், நெய் சேர்க்கலாம்.a
ஸ்டஃப்புங்கிற்கு காலிஃப்ளவரை கொஞ்ச நேரம் வேக வைத்து துருவி கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.சுட சுட பாலக் காளிஃப்ளவர் பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம், சேர்த்து சாப்பிடலாம். இதை கோபி பராத்தா என்றழைக்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -