Garlic Potato Balls : சுவையான பூண்டு உருளைக்கிழங்கு பால்ஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு - 5 நறுக்கியது, உப்பு - 1 தேக்கரண்டி , சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி , மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி, இத்தாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, பூண்டு - 2 தேக்கரண்டி நறுக்கியது, சோள மாவு - 2 மேசைக்கரண்டி, எண்ணெய், வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி , பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது , உப்பு - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி இலை
செய்முறை : முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி கொள்ளவும். அதன்பின் உருளைக்கிழங்கை நன்கு மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது மசித்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு, சில்லி பிளேக்ஸ், மிளகு தூள், இத்தாலியன் சீசனிங், நறுக்கிய பூண்டு மற்றும் சோள மாவு சேர்த்து எல்லாவற்றையும் கெட்டியான மாவைப் போல் பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது உள்ளங்கையில் சிறிது எண்ணெய் தடவி, உருளைக்கிழங்கு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி கடாயில் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது பூண்டு சாஸ் செய்வதற்கு, ஒரு கடாயை எடுத்து வெண்ணெய் சேர்த்து உருகியதும், அதில் நறுக்கிய பூண்டு, இத்தாலியன் சீசனிங், உப்பு சேர்க்கவும் 5 நிமிடம் வதக்கவும். அதன் பிறகு நறுக்கிய கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து இறக்கினால் வெண்ணெய் பூண்டு சாஸ் தயார்.
அடுத்தது உருளைக்கிழங்கு சீஸ் பால்ஸை ஒரு தட்டில் அடுக்கி, அதன் மேல் தயார் செய்த பட்டர் பூண்டு சாஸை ஊற்றினால் சுவையான பூண்டு உருளைக்கிழங்கு பால்ஸ் தயார்.