Fish Omelette : முட்டை பிரியரா நீங்கள்? அப்போ இந்த மீன் ஆம்லெட்டை செய்து பாருங்க!
தேவையான பொருட்கள்: மீன் - 2, முட்டை - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 , வெங்காயம் - 1 , கொத்துமல்லி தழை, மிளகு, உப்பு, எண்ணெய்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் மீன் துண்டுகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு மீனில் மசாலா தடவி ஊறவைக்கவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய மீனை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது மீன் துண்டுகளில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்
அடுத்தது ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மீன் துண்டுகள், கொத்தமல்லி இலை, மிளகு தூள், உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
அடுத்தது ஒரு பானில் முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் நல்ல சிவக்கும் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான மீன் ஆம்லெட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -