Fish Cutlet : சுவையான மீன் கட்லெட் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்: தேவையான பொருட்கள்: வஞ்சர மீன் - 1/4 கிலோ, வெங்காயம் - 2 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 ,இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், உப்பு, வேகவைத்த உருளைக்கிழங்கு - 2 , முட்டை - 1 , பிரட் தூள்கள், எண்ணெய்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் மீனை உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து முல்லை நீக்கி உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
அடுத்தது உதிர்த்த மீனோடு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
அடுத்தது மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும். அடுத்தது வேகவைத்த உருளைக்கிழங்கை உதிர்த்து சேர்க்கவும். அடுத்தது மசாலாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது பிசைந்து வைத்து மீனை வடை போல உள்ளங்கையில் தட்டிக் கொள்ளவும். அதன் பின் ஒரு 10 நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து எடுக்கவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் கட்லெட்டை முட்டையில் நினைத்து பிரட் தூளில் பிரட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான மீன் கட்லெட் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -