Elaneer Payasam : அடுத்த முறை இளநீர் பாயாசம் செய்வதாக இருந்தால் இப்படி செய்து பாருங்க!
தேவையான பொருட்கள் : முழு கொழுப்புள்ள பால் - 1/2 லிட்டர், ஸ்வீட் கன்டென்ஸ்டு மில்க் - 1 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, நெய், முந்திரி பருப்பு , கெட்டியான, தேங்காய் பால் - 1/2 கப், அரைத்த இளநீர் வழுக்கை - 1/2 கப், இளநீர் வழுக்கை - 1/4 கப் நறுக்கியது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலை பாதி அளவிற்கு வரும் வரை நன்கு காய்ச்சவும். அடுத்தது பாலில் ஸ்வீட் கன்டென்ஸ்டு மில்க் 1 கப் சேர்த்து நன்கு கலந்து கிளறினால் பாலில் நிறம் மாறிவிடும்.
அந்த நேரத்தில் 1/2 தேக்கரண்டி ஏலக்காய் தூள் சேர்த்து கலந்துவிட்டு அடுப்பை அணைத்து, பாலை ஆறவிடவும். அடுத்து ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸியில் இளநீர், வழுக்கை துண்டுகளை சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த தேங்காய் பாலை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து இளநீரில் உள்ள வழுக்கையை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஆற வைத்த பாலில் வடிகட்டிய தேங்காய் பாலை சேர்க்கவும்.
அடுத்து சிறு துண்டுகளாக நறுக்கிய இளநீர், தேங்காய், வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விட்டால் இளநீர் பாயசம் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -