Eggless Brownie:முட்டை இல்லாமலும் ப்ரெளனி செய்யலாம்! எளிதான ரெசிபி இதோ!

ப்ரெளனி பிடிக்கும் என்பவர்களுக்கு முட்டையில்லாமல் செய்வதற்கான செய்முறை எளிதானது. டார்க் சாக்லேட் - 1 கப் (200 கிராம்) உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப், மைதா - 3/4 கப் கோகோ பவுடர் - 1/3 கப், பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி , சர்க்கரை - 3/4 கப், வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி, கெட்டி தயிர் - 3/4 கப் சாக்லேட் சிப்ஸ், வால்நட்ஸ் - ஒரு கப். இதெல்லாம் போதும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடு செய்யவும். பின்பு அதின் மேல் மற்றோரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் கரையும் வரை கலந்துவிடவும்.

பின்பு சாக்லேட்டை இறக்கி வைத்து அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்துவிடவும்.தயிர் சேர்த்து கலக்கவும்.
சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக்கொள்ளவும். பிறகு சாக்லேட் கலவையில் சலித்த மாவை சேர்த்து கலந்து 5 நிமிடம் வைக்கவும்.
கேக் அச்சில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி சமன் செய்யவும். ஓவனை 180 டிகிரியில் சூடு செய்து மாவை வைத்து 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும். முட்டையில்லாத ப்ரௌனி தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -