Egg Sandwich Recipe : சத்தான முட்டை சான்விச்.. குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
முட்டை சான்விச் செய்ய தேவையான பொருட்கள் : பிரட் துண்டுகள், முட்டை - 6, உப்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, கொத்தமல்லி இலை நறுக்கியது, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, மயோனைஸ் - 1 மேசைக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் உப்பு மற்றும் முட்டை சேர்த்து 15 நிமிடம் வேகவிடவும்.
பிறகு முட்டையை தோலை உரித்து, அதை நன்கு துருவி கொள்ளவும்.பின்பு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்கவும்.
அடுத்து மயோனைஸ் சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவிடவும். இந்த கலவையைதான் ரொட்டிக்குள் வைக்கப்போகிறோம்.
பின் பிரட் துண்டுகளை நான்கு பக்கமும் முனையை நறுக்கி வைத்து கொள்ளவும். பிறகு பிரெட்டின் மீது மயோனைஸ் தடவி அதின் மேல் முட்டை கலவையை வைத்து, பிறகு அதன் மேல் இன்னொரு பிரட் துண்டை வைக்கவும். அவ்வளவுதான் முட்டை சான்விச் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -