Cooking Tips : சுவையான குருமா, வெண்டைக்காய் பொரியல் செய்ய டிப்ஸ் இதோ!
தனுஷ்யா | 05 Jul 2024 03:55 PM (IST)
1
பூசணிக்காயில் உள்ள சவ்வு பகுதியை வீணாக்காமல் தோசை மாவு அரைக்கும் போது சேர்த்து அரைத்தால் தோசை சுவையாக வரும்.
2
எந்த காய் கூட்டு செய்தாலும் தேங்காயுடன் சீரகம், மிளகாய் அரைத்து சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்
3
காய்ந்து போன பிரட் துண்டுகளை பஞ்சு போல் மிருதுவாக்க இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்து எடுக்கலாம்
4
குருமாவுக்கு மசாலா அரைக்கும் போது அதனுடன் வதக்கிய தக்காளியையும் சேர்த்து அரைத்தால் குருமா பதமாக வரும்.
5
வெண்டைக்காய் செய்யும் போது இறுதியாக சிறிதளவு மிளகு தூள் சேர்த்து இறக்கினால் சுவை அட்டகாசமாக இருக்கும்