Egg Frittata : முட்டை பிரியரா நீங்கள்? இத்தாலியன் ஸ்டைலில் ஃப்ரிட்டாடா செய்து அசத்துங்க!
தேவையான பொருட்கள் : முட்டை - 6, பால் - 1 மேசைக்கரண்டி, வெண்ணெய் - 1, மேசைக்கரண்டி, பூண்டு, வெங்காயம் - 1, மிளகுத்தூள், சிவப்பு குடைமிளகாய், காளான், இத்தாலியன் சீசனிங் - 1 மேசைக்கரண்டி, காய்ந்த மிளகாய் பொடி - 1 மேசைக்கரண்டி, மொஸெரெல்லா சீஸ், உப்பு, மிளகு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : ஃப்ரிட்டாடா செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு, தேவையான அளவு மிளகு தூள், சிறிதளவு பால் சேர்த்து நன்கு கலக்கி வைத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
அடுத்து ஒரு கடாயில் வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
இந்த கலவையில் கலக்கி வைத்த முட்டையை ஊற்றி துருவிய மொஸெரெல்லா சீஸ் சேர்த்து ஐந்து நிமிடத்துக்கு கடாயை மூடி வேகவைக்கவும். ஐந்து நிமிடத்திற்கு பின்பு சுவையான முட்டை ஃப்ரிட்டாடா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -