சுவையான.. ஆரோக்கியமான.. முள்ளங்கி ஜூஸ் செய்வது எப்படி?
அதென்ன முள்ளங்கி ஜூஸ். முள்ளங்கி வேகவைத்த தண்ணீரே அத்தனை நெடி அடிக்குமே அதை எப்படி ஜூஸாக்கி குடிப்பது என்று ஆயிரமாயிரம் கேள்விகள் எழுகிறதா? குழம்பாமல் தொடர்ந்து வாசியுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுள்ளங்கி சிறியது 6, கேரட் சிறியது 3,ஒரு பெரிய சைஸ் ஆப்பிள் , 2 செலரி தண்டுகள், ஒரு ஆரஞ்சு பழம், ஒரு எலுமிச்சை, அரை இன்ச் இஞ்சி, அரை இன்ச் மஞ்சள் கால் கப் (60 மில்லி) தண்ணீர்
முள்ளங்கி, கேரட் தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் ஆப்பிளை கழுவி தோல் சீவி 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஆப்பிளின் நடுப்பகுதியை நீக்கிவிடவும். 2 செலரி துண்டுகளையும் கழுவி நறுக்கிக் கொள்ளவும்.
அதேபோல் எலுமிச்சையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இஞ்சி தோல் சீவி நறுக்கிக் கொள்ளவும். எலுமிச்சை தவிர்த்து அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக ப்ளண்டரில் சேர்த்து அரைக்கவும்.
அந்த 60 மில்லி தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் எல்லாவற்றையும் பாத்திரத்தில் வடிகட்டிக் கொள்ளவும்.
இப்போது சுவையான முள்ளங்கி ஜூஸ் தயார்.
முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து அருந்துவதால் இருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -