Cooking Tips: சப்பாத்தி முதல் வெங்காய பக்கோடா வரை ருசியாக செய்ய டிப்ஸ் இதோ
அனுஷ் ச | 27 Aug 2024 01:54 PM (IST)
1
பீட்ரூட்டை எண்ணெயில் வதக்கிய பிறகு குருமா செய்தால், குருமாவின் நிறம் சிவப்பாக மாறமல் இருக்கும்
2
பாலில் நான்கு, ஐந்து நெல்மணிகளை போட்டு வைத்தால் பால் சீக்கிரமாக கெட்டுப் போகாமல் இருக்கும்
3
வெண்டைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 6 மணி நேரம் ஊற வைத்த பிறகு ,அந்த தண்ணீரில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்
4
வெங்காய பக்கோடா செய்யும் போது சிறிதளவு சோம்பு, நறுக்கிய கருவேப்பிலை சேர்த்தால் சுவையாக இருக்கும்
5
ரசத்தில் புளிப்பு அதிகமாகிவிட்டால், பருப்பு வேகவைத்த தண்ணீரை சேர்த்தால் புளிப்பு சரியாகி விடும்
6
சப்பாத்தி மாவு பிசைந்த பிறகு சிறிது நேரம் ஃபிரிட்ஜில் குளிரூட்டிய பிறகு சப்பாத்தி தேய்த்தால், மாவு கட்டையில் ஒட்டாமல் வரும்.