Pattani Masala : தாபா ஸ்டைல் பட்டாணி குருமா செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி - 1 கப், மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தக்காளி - 4 , சர்க்கரை - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1/2 தேக்கரண்டி, கசூரி மேத்தி, பச்சை மிளகாய் - 4 , பூண்டு - 6 பற்கள், இஞ்சி, வெங்காயம் - 2 , முந்திரி பருப்பு - 10 எண்ணெய், இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் & கல் பாசி, வெங்காயம் - 1 .
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், முந்திரி சேர்த்து பொன்னிறமாக வறுத்து பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் , கடல் பாசி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
அடுத்தது வெங்காயம் சேர்த்து பொன்னியமாக வதக்கவும். அதன் பின் அரைத்த பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும். அதன் பின் பச்சை பட்டாணியை சேர்க்கவும்.
பட்டாணியில் பச்சை வாசம் நீங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறிவிடவும். அதன்பின் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து கிளறிவிடவும். அதன்பின் தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
அடுத்தது ஒரு டீஸ்பூன் சர்க்கரை, கரம் மசாலா, அரைத்த வெங்காயம் முந்திரி பேஸ்டை சேர்த்து கிளறிவிடவும். அதன்பின் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 2 நிமிடம் வேகவைத்து கசூரி மேத்தி தூவி இறக்கினால் சுவையான தாபா ஸ்டைல் பட்டாணி குருமா தயார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -