Skin Care : முகத்தை இளமை மாறாமல் பிரகாசமாக வைக்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!

அழகு குறிப்புகள்
ஒரு டீஸ்பூன் பட்டைத் தூள், ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவி 10 - 15 நிமிடத்திற்கு பிறகு வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவினால் முகத்தை பொலிவாக வைக்கலாம்
முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தில் உள்ள அழுக்கு நீங்கலாம்
கீரின் டீ பேக்கை தண்ணீரில் கொதிக்க வைத்து காட்டன் பஞ்சை அந்த தண்ணீரில் நினைத்து முகத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் கரும்புள்ளிகள் குறையலாம்
2 டீஸ்பூன் ஒட்ஸ் பொடி, ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கலாம்
மிக்ஸியில் தக்காளி, ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்டாக அரைத்து முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவினால் முகத்தை பொலிவாக வைக்கலாம்