Chilli Garlic Noodles : ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் அசத்தலான சில்லி கார்லிக் நூடுல்ஸ்.. ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: நூடுல்ஸ்- 300 கிராம், தண்ணீர், உப்பு , எண்ணெய் - 2 மேசைக்கரண்டி, பூண்டு - 1 மேசைக்கரண்டி பொடியாக நறுக்கியது, பெரிய வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியது, பச்சை மிளகாய் -2 பொடியாக நறுக்கியது, 1, கேரட் - 1 கப் பொடியாக நறுக்கியது, முட்டை கோஸ் - 1 கப் பொடியாக நறுக்கியது, மஞ்சள் குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது, சிவப்பு குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது, பச்சை குடைமிளகாய் - 1/2 பொடியாக நறுக்கியது, வெங்காயத்தாள் வெங்காயம் - பொடியாக நறுக்கியது, வினிகர் - 2 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி, ரெட் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி, கிரீன் சில்லி சாஸ் - 1 மேசைக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, வெங்காயத்தாள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் உப்பு மற்றும் நூடுல்ஸை சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
அடுத்தது கேரட், முட்டைக்கோஸ், பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய், வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் நங்கு வதக்கவும்.
அடுத்தது வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், க்ரீன் சில்லி சாஸ், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
அடுத்தது வேக வைத்த நூடுல்ஸை சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக வெங்காயத்தாள் பச்சை பாகத்தை ம்ட்டும் நறுக்கி தூவி கிளறிவிட்டு இறகினால் சுவையான சில்லி கார்லிக் நூடுல்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -