Paneer Dosai : தாபா ஸ்டைலில் பனீர் தோசை ரெசிபி.... டக்குன்னு ஈசியா செய்யலாம்!
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, வெங்காயம் - 1 நறுக்கியது, பூண்டு - நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, கரம் மசாலா - 1 தேக்கரண்டி, பனீர் - 200 கிராம், கொத்தமல்லி இலை நறுக்கியது, தோசை மாவு , நெய்.
செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கவும்.
அடுத்தது பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை வதக்கவும். அதன் பின்மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும்.
அடுத்தது பனீர் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அதன் பின் நறுக்கிய கொத்தமல்லி இலை தூவிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்தது தோசை கல்லில் மாவை ஊற்றி அதன் பின் நெய் மற்றும் சீஸ் சேர்த்து வேகவிடவும்.
அடுத்தது பன்னீர் மசாலாவை தோசை மேல் பரப்பிவிட்டு அதின் மேல் சீஸை துருவிவிட்டு, மடித்து இறக்கினால் சுவையான பனீர் தோசை தயார்