Chicken Sukka : மழை காலத்திற்கேற்ற கறிவேப்பிலை சிக்கன் சுக்கா ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை, சிக்கன் - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 7 , மிளகு - 2 தேக்கரண்டி, சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 1/2 தேக்கரண்டி , தனியா - 2 மேசைக்கரண்டி, பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 3 , எண்ணெய் - 3 மேசைக்கரண்டி , கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 , தக்காளி - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் இல்லாமல் கறிவேப்பிலையை வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
அதன்பின், கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து நன்கு ஆறவிட்டு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து பொறித்த உடன் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்தது இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிட்டு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
அதன்பின் உப்பு, மஞ்சள் சேர்த்து கலந்து சிக்கனை சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் வேகவிடவும். அடுத்தது அரைத்த மசாலா பொடியை கலந்து வேக வைக்கவும்.
சிக்கன் வெந்ததும் அரைத்து வைத்த கறிவேப்பிலை பொடியை சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடத்திற்கு பிறகு இறக்கவும். சாதத்துடன் பரிமாறினால் சுவையான கருவேப்பில்லை சிக்கன் சுக்கா தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -