Curry Leaf Chicken Sukka : அட்டகாசமான கறிவேப்பில்லை சிக்கன் சுக்கா ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை, சிக்கன் - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 7 , மிளகு - 2 தேக்கரண்டி , சோம்பு - 1 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1 1/2 தேக்கரண்டி, தனியா - 2 மேசைக்கரண்டி , பட்டை ,கிராம்பு, ஏலக்காய் - 3 , எண்ணெய் - 3 மேசைக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி , சீரகம் - 1 தேக்கரண்டி , வெங்காயம் - 2 நறுக்கியது , பச்சை மிளகாய் - 4 , தக்காளி - 2 நறுக்கியது, இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி, உப்பு - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை : முதலில் கடாயில் கறிவேப்பிலையை வறுத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பிறகு கடாயில் தனியா, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஆற வைத்து கறிவேப்பிலையோடு சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அடுத்தது, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் சேர்க்கவும். கடுகு பொரிந்த உடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்தது இஞ்சி பூண்டு விழுது, தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கிளறிவிட்டு சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
சிக்கனை மசாலாவுடன் நன்கு கிளறிவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும். சிக்கன் தண்ணீர் விட்ட பிறகு சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து, வறுத்து அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
சிக்கன் நல்ல கெட்டியான பதத்திற்கு வரும் வரை வேகவைத்து கறிவேப்பிலை இலை சேர்த்து இறக்கினால் சுவையான கறிவேப்பிலை சிக்கன் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -