✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Curd Vs Yogurt : தயிரும் யோகர்ட்டும் ஒரே விஷயம்தானா? இது தெரியாம போச்சே!

தனுஷ்யா   |  03 Aug 2024 03:43 PM (IST)
1

பாலை லாக்டிக் அமில பாக்டீரியா பயன்படுத்தி நொதிக்க வைத்தால் தயிர் உருவாகும். இந்த பாக்டீரியா பாலில் காணப்படும் கேசின் என்ற புரதத்துடன் ரியாக்ட் செய்யும் போது பால், தயிராக மாறுகிறது.

2

யோகர்ட்டை தயாரிக்க லாக்டோபாகிலஸ் பல்கேரிகஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தெர்மோபிலஸ் என இரண்டு வகையான பாக்டீரியாக்கள் பாலுடன் சேர்க்கப்படுகிறது.

3

பதமும் சுவையும் : தயிரின் பதம் மிருதுவாக இருக்க யோகர்ட்டின் பதம் சற்று கெட்டியாக இருக்கும். சுவையை பொருத்தவரை தயிரை விட யோகர்ட்டில்தான் புளிப்பு சுவை கொஞ்சம் தூக்கலாக இருக்கும். தயிர் நொதிக்கும் போது பாக்டீரியாவை கட்டுப்படுத்த முடியாது. ஆனால், யோகர்ட் கட்டுப்பாட்டுடன்தான் நொதிக்க வைக்கப்படுகிறது.

4

சத்துக்கள் : தயிரிலும் யோகர்ட்டிலும் அதிக அளவிலான ஊட்டச்சத்துகள் காணப்படுகின்றன. தயிரில் கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, பி12, பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளன. யோகர்ட்டில் தயிரில் உள்ள அனைத்து சத்துக்களும் உள்ளன. ஆனால், கலோரியும் கொழுப்பும் தயிரை விட இதில் குறைவாகவே உள்ளது.

5

ஆரோக்கிய நன்மைகள் : தயிரில் யோகர்ட்டை விட அதிக அளவிலான லாக்டோஸ் இருக்க, பாலை விட குறைவான லாக்டோஸ் உள்ளது. தயிரிலும் யோகர்ட்டிலும் காணப்படும் ப்ரோபயாடிக்ஸ் குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

6

உட்கொள்ளும் முறை : தயிர் சாதத்தில் தொடங்கி வட இந்தியாவில் கிடைக்கும் சிற்றுண்டி வரை தயிரை பல விதமாக பயன்படுத்தலாம். யோகர்ட்டை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஸ்மூத்தியாகவோ இனிப்பு வகை உணவுகளுடனோ சாப்பிடலாம்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • உணவு
  • Curd Vs Yogurt : தயிரும் யோகர்ட்டும் ஒரே விஷயம்தானா? இது தெரியாம போச்சே!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.