Creamy Garlic Mashed Potatoes: சுவையான க்ரீமி உருளைக்கிழங்கு எப்படி செய்வது? ரெசிபி இதோ!
உருளைக்கிழங்கை நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
பின்பு தண்ணீரை வடிகட்டி ஆறவிடவும். ஆறியவுடன் உருளைக்கிழங்கை மசித்து கொள்ளவும்.
அடுத்து சாஸ் பானில் காய்ச்சி ஆறவைத்த பால், ப்ரெஷ் கிரீம், உப்பு மிளகு தூள், இடித்த பூண்டு சேர்த்து, நன்கு கலந்து விட்டு குறைந்த தீயில் 3 நிமிடம் கொதிக்கவிடவும். ஆறிய பிறகு இந்த பால் கலவையை வடிகட்டி வைத்து கொள்ளவும்.
மசித்த உருளைக்கிழங்குடன் உருக்கிய உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து விட்டு, தயார் செய்த பால் கலவையை சேர்த்து கலந்து விடவும்.
அருமையான மசித்த உருளைக்கிழங்கு தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -