Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Corn Palak Khichdi: ஆரோக்கியமான லன்ச் பாக்ஸ் ரெசிபி - ஸ்வீட்கார்ன்- பாலக்கீரை கிச்சடி!
அரிசி, பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயம்,தக்களி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபூண்டு ஒரு அரை கைப்பிடி அளவு தோல் நீக்கி வைக்கவும். இப்போது, குக்கரில் பருப்பு, அரிசி சேர்த்து மூன்று விசில் விட்டு வெந்ததும் தனியாக வைக்கவும்.
அடுத்து, கீரையை மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இப்போது ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, கீரை விழுதை நன்றாக வேக விடவும்.
இதை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், பட்டை, கிராம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானது அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கரம் மசாலா, தனியா தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். வெங்காயம், தக்காளி உடன் மசாலா ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்ததும், இதில் கீரை கலவையை சேர்த்து கிளறவும்.கீரை கலவையில் வேகவைத்த அரிசி, பருப்புடன் வேகவைத்த ஸ்வீட்கார்ன், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும், சீரக தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான ஸ்ட்வீட்கார்ன் - பாலக்கீரை கிச்சடி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -