Cooking Tips : சிக்கன், மட்டனில் உப்பு அதிகமாகிவிட்டால் இதை செய்யுங்க!
அனுஷ் ச | 30 May 2024 11:15 AM (IST)
1
சமையலுக்கு பருப்பு வேகவைக்கும் போது அதனோடு வரமிளகாயை சேர்த்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.
2
வெங்காயம் பக்கோடா செய்யும் போது கடலை மாவுடன் வேர்க்கடலையை அரைத்து பொடியாக்கி சேர்த்தால் பக்கோடா சுவையாக இருக்கும்.
3
ஊறுகாய் ரொம்ப நாள் கெடாமல் இருப்பதற்கு குக்கிங் வினிகரை சிறிதளவு சேர்க்க வேண்டும்
4
இட்லி பூ போல வருவதற்கு பச்சை அப்பளத்தை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து தண்ணீரில் சேர்த்தால் இட்லி பூ போல இருக்கும் .
5
காலிஃபிளவர் சமைக்கும் போது சிறிதளவு பால் சேர்த்து சமைத்தால் பச்சை மனம் அடிக்காது.
6
சிக்கன் மட்டன் ரோஸ்ட் செய்தும் போது உப்பு அதிகமாகிவிட்டால் சிறிதளவு அரிசி மாவு தூவிவிட்டால் உப்பு சுவை சரியாகிவிடும்.