Cooking Tips : சப்பாத்தி சாப்டாக வர வேண்டுமா? இதோ உங்களுக்கான டிப்ஸ்!
அனுஷ் ச | 17 Jul 2024 12:45 PM (IST)
1
சப்பாத்தி மாவு பிசையும் போது ஒரு வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும்.
2
இட்லி பொடி அரைக்கும் போது ஒரு கைப்பிடி வேர்க்கடலையை நெய்யில் வறுத்து ஆற வைத்து பொடியுடன் சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.
3
நூடுல்ஸை சுடு தண்ணீரில் வேகவைத்த பிறகு குளிர்ந்த நீரில் 2 நிமிடம் ஊறவைத்து வடிகட்டி சமைத்தால் நூடுல்ஸ் குழையாமல் வரும்.
4
தேங்காய், சோம்பை மிக்ஸியில் அரைத்து சிக்கன் குழம்பு கொதித்து வரும் போது சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
5
கொழுக்கட்டை செய்ய அரிசி ஊறவைக்கும் போது ஒரு கைப்பிடி உளுந்து சேர்த்து ஊறவைத்து அரைத்தால் கொழுக்கட்டை வெடிக்காமல் வரும்.
6
அரிசி ஊறவைக்கும் போது இரண்டு ஐஸ் கட்டிகளை சேர்த்தால் சாதம் உதிரி உதிரியாக வரும்.