Cooking Tips : உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது வெடிக்காமல் இருக்க இதை செய்யுங்க!
வாழைக்காயை காற்றோட்டமாக வைக்காமல் ஒரு துணி பையில் போட்டு வைத்தால் ஒரு வாரத்திற்கு கெடாமல் இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமிளகாய் அரைக்கும் போது சரியாக அரைப்படவில்லை என்றால் மிளகாயுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்தால் நன்றாக அரைபடும்.
இட்லி மாவில் உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு கரண்டி அரிசி ஒரு கரண்டி உளுந்து சேர்த்து மிக்ஸியில் அரைத்து சேர்த்தால் உப்பு சுவை சரியாகிவிடும்.
உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது வெடிக்காமல் இருக்க வேகவைக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்க்க வேண்டும்.
தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை வதக்கிய பின் தோசை சூட்டால் மாவு ஒட்டாமல் வரும்.
அப்பளம், வடகம் போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு பெருங்காயம் கட்டி சேர்த்து மூடி வைத்தால் அதிக நாட்களுக்கு நமத்து போகாமல் இருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -