Cooking Tips: சப்பாத்தி சாப்டாக வருவதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!
அனுஷ் ச | 21 Jul 2024 11:07 AM (IST)
1
வெண்டைக்காயை சின்னதாக நறுக்கி தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து அந்த தண்ணீரில் சப்பாத்திக்கு மாவு பிசைந்தால் சப்பாத்தி சாப்டாக வரும்.
2
தேங்காய் தண்ணீர் வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்.
3
காளான் குழப்பு செய்யும் போது பெரிய வெங்காயத்திற்கு பதில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாயை சேர்த்து டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும்.
4
புதினா சட்னி செய்யும் போது சிறிதளவு கடலைப்பருப்பு மற்றும் வேர்க்கடலை சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்
5
தோசை மாவு புளித்து விட்டால் அதில் வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய் துண்டுகள், கருவேப்பிலை சேர்த்து கார பணியாரமாக செய்து சாப்பிடலாம்.
6
ஆட்டு ரத்த பொரியல் செய்யும் போது சீரகம் மிளகை அரைத்து கடைசியாக போது தூவிவிட்டு கிளறி இறக்கினால் சுவையாக இருக்கும்.