Cooking Tips : சப்பாத்தியை இப்படி கூட செய்யலாமா ? இது தெரியாம போச்சே!
அனுஷ் ச | 29 Jul 2024 01:51 PM (IST)
1
சப்பாத்தி மாவு பிசையும் போது புதினா, கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சப்பாத்தி மாவில் சேர்த்து சப்பாத்தி செய்தால் நல்ல மணமாக இருக்கும்.
2
ரவா தோசை செய்யும் போது கோதுமை மாவு சேர்த்து செய்தால் தோசை சுவையாக இருக்கும்.
3
கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு மூன்றையும் சேர்த்து பஜ்ஜி செய்தால் உப்பலாக வரும்.
4
சுண்டைக்காய் குழம்பு செய்யும் போது நல்லெண்ணெய் ஊற்றி தாளித்தால் குழம்பு நல்ல மணமாக இருக்கும்.
5
நெல்லிக்காய் ஜூஸ் செய்தும் போது ஒரு துண்டு இஞ்சி சேர்த்தால் அதிகமாக புளிப்பு இருக்காது.
6
பாகற்காய் பொரியல் செய்யும் போது வெங்காயம் அதிகமாக சேர்த்தால் கசப்பு தெரியாது.